Welcome to Ecomanic - we offer landsaping services

  • 007 Edgar Buildings,
    George Street, CA 03, USA

  • Mon - Sat 9.00 - 20.00,
    Sunday Close

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் எதிர்வரும் 30-05-2026ம் திகதி சனிக்கிழமை வைகாசி விசாக உற்சவம் நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.

அன்றைய தினம் மு.பகல் 10.30 மணியளவில் எம்பெருமானுக்கு ஸ்நபனாபிஷேகமும் ஏனைய பரிவார தெய்வங்களுக்கு உருத்திராபிஷேகமும் நடைபெறவுள்ளது.

அதனைத் தொடர்ந்து விசேட பூஜாராதனைகள் நடைபெற்று வசந்த மண்டபத்தில் அலங்கார மூர்த்திகளாக எழுந்தருளியிருக்கும் வள்ளி தேவசேனா சமேத சண்முகப் பெருமானுக்கு சோடசோபசாரங்களுடன் கூடிய சிறப்பு பூஜாராதனைகள் நடைபெற்று, விஷேட பஜனைப் பிரார்த்தனையுடன் உள்வீதி உலா வரும் உற்சவ நிகழ்வு நடைபெறும்.

முருகப்பெருமான் திருவவதாரம் செய்த நாளாகிய வைகாசி விசாக நாள் சிறப்பு பூஜையில் எம்பெருமான் அடியார்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு எல்லாம் வல்ல வள்ளி தேவசேனா சமேத சண்முகப் பெருமானைத் தரிசித்து, திருவருளையும், இஷ்ட சித்திகளையும் பெற்றுய்யுமாறு பணிவன்புடன் வேண்டிக்கொள்கின்றோம்.

உபயம் – சுந்தரலிங்கம் சஞசயன் குடும்பம் – லண்டன்

நிர்வாக சபையினர்