நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் எதிர்வரும் 25-06-2026 வியாழக்கிழமை ஏழாவது மணவாளக்கோல விழா நடைபெறவுள்ளது.
அன்றைய தினம் மூலவருக்கு நவோத்தர சகஸ்ர (1009) சங்காபிஷேகமும் ஏனைய பரிவார தெய்வங்களுக்கு ஸ்நபனாபிஷேகமும் இடம்பெற திருவருள் கைகூடியுள்ளது.
அதனைத் தொடர்ந்து சிறப்பு பூஜை நடைபெற்று பிரசாதம் வழங்கப்படும். அதனையடுத்து ஆலய திருமடத்தில் மகேஸ்வர பூஜை(அன்னதானம்) யுடன் பகல் நிகழ்வுகள் நிறைவுபெறும்.
மாலை 5.30 மணியளவில் வசந்தமண்டப பூஜை இடம்பெற்று விநாயகர், வள்ளி தேவசேனா சமேத முருகையா, காளியம்மன் ஆகிய மூன்று சுவாமிகளும் அழகிய பூந்தண்டிகையில் வெளிவீதி உலாவரும் உற்சவ நிகழ்வு நடைபெறவுள்ளது.
மெய்யடியார்கள் அனைவரும் அபிஷேகத்திற்குத் தேவையான பால், நெய். இளநீர், பூமாலைகள் மற்றும் உதிரிப் பூக்கள் என்பவற்றுடன் வருகை தந்து எம்பெருமானைத் தரிசித்து தங்களின் தீய வினைகளைப் போக்கி முருகையாவின் பேரருளினைப் பெற்றேகுமாறு பணிவன்புடன் வேண்டிக்கொள்கின்றோம்.
தனிப்பட்ட உபயங்களும், உபயகாரர் விபரங்களும்
முருகையாவின் மெய்யடியார்களே!
எம்பெருமானின் மணவாளக்கோல விழாவின் பொது உபயமான சங்காபிஷேக நிகழ்வுகள் சிறப்பாக நடைபெறுவதற்கு உள்ளூர் மற்றும் வெளிநாட்டில் வாழும் எம்பெருமான் அடியார்கள் அனைவரும் தங்களாலியன்ற நிதி நன்கொடைகளை வழங்கி ஒத்துழைப்பு நல்குமாறு பணிவன்புடன் வேண்டிக்கொள்கிறோம்.
முக்கிய குறிப்பு
கடந்த 2025ம் ஆண்டு மணவாளக்கோல விழாவின் சங்காபிஷேகச் செலவுகளுக்கு போதுமான நிதி சேராமையால் ரூபா 41,000/= பற்றாக்குறை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நிர்வாக சபையினர்