Welcome to Ecomanic - we offer landsaping services
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் எதிர்வரும் 02-06-2023ம் திகதி வெள்ளிக்கிழமை வைகாசி விசாக உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.
முருகையாவின் திருவவதார திருநாளாகிய அன்றைய தினம் முற்பகல் 11.00 மணியளவில் வள்ளி தேவசேனா சமேத முருகையாவுக்கு ஸ்நபனாபிஷேகம், நடைபெற்று தொடர்ந்து விசேட பூஜை இடம்பெறவுள்ளது.
அதனைத் தொடர்ந்து வசந்த மண்டபத்தில் அலங்கார ரூபமாக வீற்றிருக்கும் அனுக்கிரக மூர்த்தியாகிய எம்பெருமானுக்கு விசேட தூப தீபங்கள் அடங்கிய சோடசோபசார பூஜாராதனைகள் நடைபெற்று சிறப்பு பஜனை பிரார்த்தனையுடன் உள்வீதி உலாவரும் உற்சவ நிகழ்வு நடைபெறும்.
முருகையாவின் அடியார்கள் அனைவரும் மேற்படி வைகாசி விசாக உற்சவத்தில் தவறாது முக்ககவசம் அணிந்து கலந்து கொண்டு எம்பெருமானைத் தரிசித்து இஷ்ட சித்திகளையும், திருவருளையும் பெற்றுய்யுமாறு பணிவன்புடன் வேண்டிக் கொள்கின்றோம்.
உபயகாரர் – சுந்தரலிங்கம் – சஞ்சயன் குடும்பம் – லண்டன்
நிர்வாக சபையினர்