Welcome to Ecomanic - we offer landsaping services

  • 007 Edgar Buildings,
    George Street, CA 03, USA

  • Mon - Sat 9.00 - 20.00,
    Sunday Close

murukaiya-01நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் அமைந்துள்ள விநாயகப் பெருமானுக்கு 10-09-2021ம் திகதி வெள்ளிக்கிழமை விநாயக சதுர்த்தி விரத உற்சவம் நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.

அன்றைய தினம் பி.ப. 1.00 மணியளவில் விநாயகப் பெருமானுக்கு விசேட ஸ்நபன அபிஷேகம் நடைபெறும்..அதனைத் தொடர்ந்து பிள்ளையார் கதை படிப்பு இடம்பெறும்.

தொடர்ந்து விநாயகருக்குரிய விசேட நைவேத்தியங்கள் நிவேதனம் செய்யப்பட்டு சிறப்பு பூஜாராதனை இடம்பெறவுள்ளது.

அதனைத் தொடர்ந்து, மாலை 3.30 மணியளவில் வசந்த மண்டபத்தில் அலங்கார மூர்த்தியாக எழுந்தருளியிருக்கும் விநாயகப் பெருமானுக்கு விஷேட பூஜாராதனைகள் இடம்பெற்று சிறப்பு பஜனை பிரார்த்தனையுடன் உள்வீதி உலா வரும் உற்சவ நிகழ்வு இடம்பெறும்.

எனவே இந்த சிறப்பான விநாயக சதுர்த்தி விரத விசேட பூஜை, உற்சவத்தில் எம்பெருமான் அடியார்கள் அனைவரும் கலந்து தரிசித்து விநாயகப் பெருமானின் திருவருளைப் பெற்றுய்யுமாறு பணிவன்புடன் வேண்டிக்கொள்கின்றோம்.

உபயகாரர் – திரு ஆறுமுகம் – அழகராசா குடும்பத்தினர் – நாகர்கோவில் மேற்கு

நிர்வாக சபையினர்