Welcome to Ecomanic - we offer landsaping services

  • 007 Edgar Buildings,
    George Street, CA 03, USA

  • Mon - Sat 9.00 - 20.00,
    Sunday Close

49நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் நிகழும் பிலவ வருஷம் ஆனி மாதம் 07ம் (21-06-2021) திகதி திங்கட்கிழமை இரண்டாவது மணவாளக்கோல விழா நடைபெறவுள்ளது.

தற்போதைய நாட்டின் சூழ்நிலைக்கேற்ப அன்றைய தினம் மு.ப. 10.00 மணியளவில் மூலவருக்கு அஷ்டோத்தர சத (109) சங்காபிஷேகமும் மற்றைய பரிவார தெய்வங்களுக்கு உருத்திராபிஷேகமும் இடம்பெற திருவருள் கைகூடியுள்ளது.

அதனைத் தொடர்ந்து சிறப்பு பூஜை நடைபெற்றவுடன், வசந்தமண்டப பூஜை இடம்பெற்று விநாயகர், வள்ளி தேவசேனா சமேத முருகையா, காளியம்மன் ஆகிய மூன்று சுவாமிகளும் உள்வீதி உலாவரும் உற்சவ நிகழ்வு நடைபெறவுள்ளது.

மெய்யடியார்கள் அனைவரும் அபிஷேகத்திற்குத் தேவையான பால், இளநீர், பூமாலை மற்றும் உதிரிப் பூக்கள் என்பவற்றுடன் வருகை தந்து எம்பெருமானைத் தரிசித்து தங்களின் தீய வினைகளைப் போக்கி சிறப்புடன் வாழ முருகையாவின் நல்லருளைப் பெற்றேகுமாறு வேண்டிக்கொள்கின்றோம்.

தனிப்பட்ட உபயங்களும் உபயகாரர்களும்

01. அன்னதானம் – சி.ஜெயக்குமார்- சுவிஸ்
02. விஷேட மேளம் – ஆ.அழகராசா குடும்பம்- லண்டன்
03. மாலை, வெள்ளை அலங்காரம் – க.பாஸ்கரன்- சுவிஸ்
04. ஒலி, ஒளி அமைப்பு – ஆ.மயில்வாகனம்- அவுஸ்திரேலியா
05. பூந்தண்டிகை – ஆ. சிவானந்தராசா- (அவுஸ்.) கொடுக்கிளாய்,ஆழியவளை
06. முருகையா சாத்துப்படி- ஏ.கணேசபிள்ளை- நாகர்கோவில் கிழக்கு
07. விநாயகர் சாத்துப்படி – கி.சிவசாமி- நாகர்கோவில் கிழக்கு
08. காளியம்மன் சாத்துப்படி – க.சிவபாதசுந்தரம் குடும்பம்- பருத்தித்துறை

முருகையாவின் மெய்யடியார்களே!
எம்பெருமானின் மணவாளக்கோல விழாவை இவ்வருடம் நாட்டின் தற்போதைய சூழ்நிலைக்கேற்ப மட்டுப்படுத்தி செய்வதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க இவ்வருடம் அன்னதானம், பூந்தண்டிகை, மேளம் என்பன நிறுத்தப்பட்டுள்ளது.

பொது உபயமான சங்காபிஷேக நிகழ்வுகள் சிறப்பாக நடைபெறுவதற்கு உள்ளூர் மற்றும் வெளிநாட்டில் வாழும் எம்பெருமான் அடியார்கள் அனைவரும் தங்களாலியன்ற நிதி நன்கொடைகளை வழங்கி ஒத்துழைப்பு நல்குமாறு பணிவன்புடன் வேண்டிக்கொள்கிறோம்.

நிர்வாக சபையினர்
அருள்மிகு முருகையா தேவஸ்தானம்
நாகர்கோவில் வடக்கு