Welcome to Ecomanic - we offer landsaping services
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் நிகழும் சார்வரி வருஷம் வைகாசி மாதம் 22ம்(04-06-2020)நாள் வியாழக்கிழமை வைகாசி விசாக உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.
முருகையாவின் அவதார திருநாளாகிய அன்றைய தினம் முற்பகல் 11.00 மணியளவில் வள்ளி தேவசேனா சமேத முருகையாவுக்கு ஸ்நபனாபிஷேகம், நடைபெற்று தொடர்ந்து விசேட பூஜை இடம்பெறவுள்ளது.
அதனைத் தொடர்ந்து வசந்த மண்டபத்தில் அலங்கார ரூபமாக வீற்றிருக்கும் அனுக்கிரக மூர்த்தியாகிய எம்பெருமானுக்கு விசேட தூப தீபங்கள் அடங்கிய சோடசோபசார பூஜாராதனைகள் நடைபெற்று உள்வீதி உலாவரும் உற்சவ நிகழ்வு நடைபெறும்.
முருகையாவின் அடியார்கள் அனைவரும் மேற்படி வைகாசி விசாக உற்சவத்தில் தவறாது கலந்து கொண்டு வள்ளி தேவசேனா சமேத அருள்மிகு முருகையாவை தரிசித்து இஷ்ட சித்திகளையும், திருவருளையும் பெற்றுய்யுமாறு பணிவன்புடன் வேண்டிக் கொள்கின்றோம்.
உபயகாரர் – சுந்தரலிங்கம் – சஞ்சயன் குடும்பம் – லண்டன்
நிர்வாக சபையினர்
அருள்மிகு முருகையா தேவஸ்தானம்
நாகர்கோவில் வடக்கு