Welcome to Ecomanic - we offer landsaping services

  • 007 Edgar Buildings,
    George Street, CA 03, USA

  • Mon - Sat 9.00 - 20.00,
    Sunday Close

எதிர்வரும் 14-04-2019 அன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1-12 மணிக்கு பூர்வபக்க தசமி திதியில், ஆயிலிய நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில், கடக லக்கினத்தில், சூரியன் காலவோரையில் புதிய விகாரி வருஷம் பிறக்கின்றது.

அன்று காலை 9.12 மணி முதல் பிற்பகல் 5.12 மணி வரை விஷு புண்ணிய காலமாகும்

இப்புண்ணிய காலத்தில் யாவரும் வைகறையில் துயிலெழுந்து, நித்திய கர்மானுஷ்டங்களை முடித்து, விதிப்படி சங்கற்பித்து, மருத்து நீர் தேய்த்து ஸ்நானம் செய்து, வெள்ளை நிறமுடைய பட்டாடையாயினும், சிவப்பு கரையமைந்த புதிய பட்டாடையாயினும் அணிதல் வேண்டும்.

புதிய விகாரி வருடப் பிறப்பு நாளில் மேற்கூறிய வண்ணம் ஸ்நானம் செய்து புதிய வஸ்திரமணிந்த பின்னர், மனத்தூய்மையுடன் குலதெய்வங்களை வழிபாடு செய்து, பிதா, மாதா, குரு ஆகியோரை வணங்கி, இயன்ற தான தருமங்கள் செய்து மங்களகரமாக வாழக்கடவர்.

தோஷ நட்சத்திரங்கள்:-

புனர்பூசம் 4ம்கால், பூசம், ஆயிலியம், கேட்டை, மூலம், பூராடம், உத்தராடம் 1ம்கால், ரேவதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தோர் தவறாது மருத்து நீர் தேய்த்து ஸ்நானம் செய்து இயன்ற தான தருமங்களைச் செய்தல் வேண்டும்.

அன்றைய தினம் அருள்மிகு முருகையா ஆலயத்தில், புதிய விகாரி வருஷம் பிறக்கும் நேரமாகிய பிற்பகல் 1.00 மணியளவில் விசேட அபிஷேகம் நடைபெற்று, ஆலய வாசலில் புதிய பானையில் பொங்கல் செய்து படைத்து, சித்திரைப் புதிய விகாரி வருஷ விசேட பூஜை மிகவும் சிறப்பாக நடைபெறவுள்ளது.

இந்த சித்திரை புதிய விகாரி வருடப் பிறப்பு விசேட பூஜையில் முருகையாவின் அடியார் பெருமக்கள் யாவரும் கலந்து கொண்டு எம்பெருமானைத் தரிசித்து இஷ்ட சித்திகளைப் பெற்றுய்யுமாறு வேண்டிக்கொள்கின்றோம்.

உபயம் – மா.சாம்பசிவம் குடும்பத்தினர் – நாகர்கோவில் கிழக்கு

நிர்வாக சபையினர்
அருள்மிகு முருகையா தேவஸ்தானம்
நாகர்கோவில் வடக்கு