Welcome to Ecomanic - we offer landsaping services

  • 007 Edgar Buildings,
    George Street, CA 03, USA

  • Mon - Sat 9.00 - 20.00,
    Sunday Close

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் நிகழும் விளம்பி வருஷம் வைகாசி மாதம் 14ம் (28-05-2018) நாள் திங்கட்கிழமை வைகாசி விசாக உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.

முருகையாவின் அவதார திருநாளாகிய அன்றைய தினம் முற்பகல் 10.30 மணியளவில் மூல மூர்த்திக்கு ஸ்நபனாபிஷேகமும், ஏனைய பரிவார தெய்வங்களுக்கு உருத்திராபிஷேகமும் நடைபெற்று தொடர்ந்து விசேட பூஜை இடம்பெறவுள்ளது.

அதனைத் தொடர்ந்து வசந்த மண்டபத்தில் அலங்கார ரூபமாக வீற்றிருக்கும் அனுக்கிரக மூர்த்தியாகிய முருகையாவுக்கு விசேட தூப, தீபங்கள் அடங்கிய சோடசோபசார ஆராதனைகள் நடைபெற்று உள்வீதி உலாவரும் உற்சவ நிகழ்வு நடைபெறவுள்ளது.

அடியார்கள் அனைவரும் முருகையாவின் திருவவதார நாளாகிய வைகாசி விசாக உற்சவ விஷேட பூஜையில் தவறாது கலந்து கொண்டு வள்ளி தேவசேனா சமேத அருள்மிகு முருகையாவை தரிசித்து இஷ்ட சித்திகளையும், திருவருளையும் பெற்றுய்யுமாறு பணிவன்புடன் வேண்டிக் கொள்கின்றோம்.

அவதார உற்சவம் நிறைவடைந்த பின் ஆலய திருமடத்தில் அன்னதானம் வழங்கும் நிகழ்வும் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

உபயகாரர் – சுந்தரலிங்கம் – சஞ்சயன் குடும்பம் – லண்டன்

நிர்வாக சபையினர்
அருள்மிகு முருகையா தேவஸ்தானம்
நாகர்கோவில் வடக்கு