Welcome to Ecomanic - we offer landsaping services

  • 007 Edgar Buildings,
    George Street, CA 03, USA

  • Mon - Sat 9.00 - 20.00,
    Sunday Close

எதிிர்வரும் 14-04-2018 அன்று சனிக்கிழமை காலை 7.00 மணிக்கு அபரபக்க திரயோதசி திதியில், உத்தரட்டாதி நட்சத்திரத்தின் முதலாம் பாதத்தில், மேட லக்கினத்தில், சனி காலவோரையில் புதிய விளம்பி வருஷம் பிறக்கின்றது.

அன்று அதிகாலை 3.00 மணி முதல் முற்பகல் 11.00மணி வரை விஷு புண்ணிய காலமாகும்

இப்புண்ணிய காலத்தில் யாவரும் வைகறையில் துயிலெழுந்து நித்திய கர்மானுஷ்டங்களை முடித்து விதிப்படி சங்கற்பித்து மருத்து நீர் தேய்த்து ஸ்நானம் செய்து சிவப்பு நிறமுடைய பட்டாடையாயினும் கறுப்பு கரையமைந்த புதிய பட்டாடையாயினும் அணிதல் வேண்டும்.

தோஷ நட்ஷத்திரங்கள்:-
பூசம், மகம், பூரம், உத்தரம் 1ம் பாதம், அனுஷம், பூரட்டாதி 4ம் பாதம், உத்தரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தோர் தவறாது மருத்து நீர் தேய்த்து ஸ்நானம் செய்து இயன்ற தானதருமங்களைச் செய்தல் வேண்டும்.

புதிய விளம்பி வருடப் பிறப்பு நாளில் மேற்கூறிய வண்ணம் ஸ்நானம் செய்து புதிய வஸ்திரமணிந்த பின்னர், மனத்தூய்மையுடன் குலதெய்வங்களை வழிபாடு செய்து, பிதா, மாதா, குரு ஆகியோரை வணங்கி, தான தருமங்கள் செய்து மங்களகரமாக வாழக்கடவர்.

அன்றைய தினம் எமது முருகையா ஆலயத்தில் காலை 8.00 மணியளவில் விசேட அபிஷேகம் நடைபெற்று ஆலய வாசலில் புதிய பானையில் பொங்கல் செய்து படைத்து சித்திரைப் புதிய விளம்பி வருஷ விசேட பூஜை மிகவும் சிறப்பாக நடைபெறவுள்ளது.

இந்த புதுவருடப் பிறப்பு விசேட பூஜையில் முருகையாவின் அடியார் பெருமக்கள் யாவரும் கலந்து கொண்டு எம்பெருமானைத் தரிசித்து இஷ்ட சித்திகளைப் பெற்றுய்யுமாறு வேண்டிக்கொள்கின்றோம்.

உபயம் – மா.சாம்பசிவம் குடும்பத்தினர் – நாகர்கோவில் கிழக்கு

நிர்வாக சபையினர்
அருள்மிகு முருகையா தேவஸ்தானம்
நாகர்கோவில் வடக்கு