Welcome to Ecomanic - we offer landsaping services
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் நிகழும் ஏவிளம்பி வருஷம் பங்குனி மாதம் 16ம் திகதி (30-03-2018) வெள்ளிக்கிழமை பங்குனி உத்தர உற்சவம் நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.
அன்றைய தினம் வெள்ளிக்கிழமையாகையால் வழமைபோல் மு.பகல் 10.30 மணியளவில் எம்பெருமானுக்கு ஸ்நபனாபிஷேகமும் ஏனைய பரிவார தெய்வங்களுக்கு உருத்திராபிஷேகமும் நடைபெறவுள்ளது.
அதனைத் தொடர்ந்து விசேட பூஜாராதனைகள் நடைபெற்று வசந்த மண்டபத்தில் அலங்கார மூர்த்திகளாக எழுந்தருளியிருக்கும் வள்ளி தேவசேனா சமேத முருகையாவுக்கு சிறப்பு மிக்க சோடசோபசாரங்களுடன் கூடிய பூஜாராதனைகள் முடிவடைந்ததும் உள்வீதியுலா உற்சவம் நடைபெறும்.
முருகையாவுக்கும் தெய்வானையம்மனுக்கும் திருமணம் நடைபெற்ற நாளாகிய பங்குனி உத்தர விழா சிறப்பு பூஜையில் எம்பெருமான் அடியார்கள் அனைவரும் கலந்து கொண்டு எல்லாம்வல்ல வள்ளி தேவசேனா சமேத முருகையாவைத் தரிசித்து இஷ்ட சித்திகளைப் பெற்றுய்யுமாறு வேண்டிக்கொள்கின்றோம்.
உபயம் – சுந்தரலிங்கம் – பார்த்திபராசா குடும்பம் – லண்டன்
பங்குனி உத்தர உற்சவம் எமது ஆலயத்தில் இவ்வருடம் முதல்முறையாக நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நிர்வாக சபையினர்