Welcome to Ecomanic - we offer landsaping services
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் நிகழும் ஏவிளம்பி வருஷம் ஆனி மாதம் 07ம் (21-06-2017) திகதி புதன்கிழமை கார்த்திகை உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.
அன்றைய தினம் நண்பகல் 12.30 மணியளவில் மூல மூர்த்தியாகிய வள்ளி தேவசேனா சமேத முருகையாவுக்கு ஸ்நபனாபிஷேகம் நடைபெற்று,
அதனைத் தொடர்ந்து கந்தபுராண படனம் (கந்த விரதப் படலம்) ஓதுவார்களினால் வாசிக்கப்பட்டு பயன் விரித்துக் கூறும் நிகழ்வு நடைபெறவுள்ளது.
புராணபடனம் நிறைவடைந்த பின்னர் மூலவரின் விஷேட பூஜையைத் தொடர்ந்து வசந்த மண்டபத்தில் அலங்கார ரூபமாக வீற்றிருக்கும் அனுக்கிரக மூர்த்தியாகிய எம்பெருமானுக்கு விசேட தூப, தீபங்கள் அடங்கிய சோடசோபசார ஆராதனைகள் நடைபெற்று உள்வீதி உலாவரும் உற்சவ நிகழ்வு நடைபெறவுள்ளது.
அன்றைய தினம் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த கதிரேசு – மலர்வேணியம்மா அவர்களின் ஞாபகார்த்த அன்பளிப்பாக வழங்கப்பட்ட புதிய ஆட்டுக்கடா வாகனத்தில் வள்ளி தேவசேனா சமேத முருகையா எழுந்தருளி உள்வீதி உலா வரவுள்ளார் என்பதை அடியார் பெருமக்களுக்கு மகிழ்வுடன் அறியத்தருகின்றோம்.
அதேவேளை முருகையாவின் இளம் அடியார்கள் அனைவரும் சுவாமி காவும் நிகழ்வில் பங்குபற்றி ஒத்துழைப்பு நல்குமாறு பணிவன்புடன் வேண்டிக்கொள்கின்றோம்.
எம்பெருமான் அடியார்கள் அனைவரும் மேற்படி கார்த்திகை விரத உற்சவ விஷேட பூஜையில் தவறாது கலந்து கொண்டு வள்ளி தேவசேனா சமேத அருள்மிகு முருகையாவை தரிசித்து இஷ்ட சித்திகளையும், திருவருளையும் பெற்றுய்யுமாறு பணிவன்புடன் வேண்டிக்கொள்கின்றோம்.
உபயகாரர் – சி.அருணகிரிநாதர் குடும்பம் (வெற்றிலைக்கேணி) –அவுஸ்திரேலியா
நிர்வாக சபையினர்
அருள்மிகு முருகையா தேவஸ்தானம்
நாகர்கோவில் வடக்கு