Welcome to Ecomanic - we offer landsaping services

  • 007 Edgar Buildings,
    George Street, CA 03, USA

  • Mon - Sat 9.00 - 20.00,
    Sunday Close

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் நிகழும் ஏவிளம்பி வருஷம் சித்திரை மாதம் 14ம் (27-04-2017) திகதி வியாழக்கிழமை கார்த்திகை உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.

அன்றைய தினம் மாலை 3.00 மணியளவில் மூல மூர்த்தியாகிய வள்ளி தேவசேனா சமேத முருகையாவுக்கு ஸ்நபனாபிஷேகம் நடைபெற்று அதனைத் தொடர்ந்து விஷேட பூஜை இடம்பெறவுள்ளது.

மூலவரின் விஷேட பூஜையைத் தொடர்ந்து வசந்த மண்டபத்தில் அலங்கார ரூபமாக வீற்றிருக்கும் அனுக்கிரக மூர்த்தியாகிய எம்பெருமானுக்கு விசேட தூப, தீபங்கள் அடங்கிய சோடசோபசார ஆராதனைகள் நடைபெற்று உள்வீதி உலாவரும் உற்சவ நிகழ்வு நடைபெறவுள்ளது.

நண்பகல் கந்தபுராண படனம் (கந்த விரதப் படலம்) ஓதுவார்களினால் வாசிக்கப்பட்டு பயன் விரித்துக் கூறும் நிகழ்வு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எம்பெருமான் அடியார்கள் அனைவரும் மேற்படி உற்சவ விஷேட பூஜையில் தவறாது கலந்து கொண்டு வள்ளி தேவசேனா சமேத அருள்மிகு முருகையாவை தரிசித்து இஷ்ட சித்திகளையும், திருவருளையும் பெற்றுய்யுமாறு பணிவன்புடன் வேண்டிக்கொள்கின்றோம்.

உபயகாரர் – தருமலிங்கம் – சுபேந்திரன் குடும்பம் – நாகர்கோவில் கிழக்கு (ஆனைக்கோட்டை)

நிர்வாக சபையினர்
அருள்மிகு முருகையா தேவஸ்தானம்
நாகர்கோவில் வடக்கு