Welcome to Ecomanic - we offer landsaping services

  • 007 Edgar Buildings,
    George Street, CA 03, USA

  • Mon - Sat 9.00 - 20.00,
    Sunday Close

நிகழும் துர்முகி வருடம் பங்குனி மாதம் 31ம் திகதி வியாழக்கிழமை பின்னிரவு 12.48 மணிக்கு அபரபக்க திருதியை திதியில், விசாக நட்சத்திரத்தில், மகர லக்கினத்தில், சனி சூக்குமவோரையில் புதிய ஏவிளம்பி வருஷம் பிறக்கின்றது.

அன்று முன்னிரவு 08.48 மணிமுதல் பின்னிரவு 04.48 வரை விஷு புண்ணிய காலமாகும்

இப்புண்ணிய காலத்தில் யாவரும் விதிப்படி சங்கற்பித்து மருத்து நீர் தேய்த்து ஸ்நானம் செய்து மஞ்சள் நிறமுடைய பட்டாடையாயினும் மஞசள் கரையமைந்த புதிய பட்டாடையாயினும் அணிதல் வேண்டும்.

தோஷ நட்ஷத்திரங்கள்:-

புனர்பூசம், சித்திரை 3ம், 4ம் பாதம், சுவாதி, விசாகம், பூரட்டாதி, உத்தரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தோர் தவறாது மருத்து நீர் தேய்த்து ஸ்நானம் செய்தல் வேண்டும்.

மறுநாள்  சித்திரை முதலாம் திகதி  வெள்ளிக்கிழமை (14-04-2017) வைகறையில் துயிலெழுந்து மனத்தூய்மையுடன் குலதெய்வங்களை வழிபாடு செய்து பிதா, மாதா, குரு ஆகியோரை வணங்கி  தான தருமங்கள் செய்து மங்களகரமாக வாழக்கடவர்.

அன்றைய தினம் எமது ஆலயத்தில் காலை 8.00 மணியளவில் விசேட அபிஷேகம் நடைபெற்று ஆலய வாசலில் புதிய பானையில் பொங்கல் செய்து படைத்து சித்திரைப் புதிய  ஏவிளம்பி வருஷ விசேட பூஜை மிகவும் சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை எம்பெருமான் அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.

உபயம் – மா.சாம்பசிவம் குடும்பத்தினர் – நாகர்கோவில் கிழக்கு

அன்று வெள்ளிக்கிழமை பகல் அபிஷேகம், அன்னதானம் வழமை போன்று நடைபெறும்.

நிர்வாக சபையினர்
அருள்மிகு முருகையா தேவஸ்தானம்
நாகர்கோவில் வடக்கு