Welcome to Ecomanic - we offer landsaping services
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் அமைந்துள்ள விநாயகருக்கு எதிர்வரும் 05-09-2016 திங்கட்கிழமை ஆவணி சதுர்த்தி விரத விசேட அபிசேக ஆராதனைகள் நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.
அன்றைய தினம் மாலை 3.00 மணியளவில் விநாயகப் பெருமானுக்கு விசேட ஸ்நபன அபிசேகம் நடைபெறும். தொடர்ந்து விநாயகருக்குரிய விசேட நைவேத்தியங்கள் படையல் செய்து சிறப்பு பூஜாராதனைகள் இடம்பெறும்.
எனவே இந்த சிறப்பான ஆவணி சதுர்த்தி விரத விசேட பூஜையில் எம்பெருமான் அடியவர்கள் அனைவரும் கலந்துகொண்டு தரிசித்து விநாயகப்பெருமானின் திருவருளைப் பெற்றுய்யுமாறு பணிவன்புடன் வேண்டிக்கொள்கின்றோம்.
ஆவணி சதுர்த்தி விரத பூஜை உபயகாரர் – திரு ஆறுமுகம் – அழகராசா குடும்பத்தினர் – லண்டன்
நிர்வாக சபையினர்
அருள்மிகு முருகையா தேவஸ்தானம்
நாகர்கோவில் வடக்கு