Welcome to Ecomanic - we offer landsaping services
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் மஹா சிவராத்திரி விரத விழா எதிர்வரும் 08-03-2024 வெள்ளிக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற ஏற்பாடாகியுள்ளது என்பதனை எம்பெருமான் அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.
வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணி முதல் மறுநாள் சனிக்கிழமை காலை 6.00 மணி வரை மஹா சிவராத்திரி விரத நான்கு சாமப் பூஜைகளும் விஷேட அபிஷேக ஆராதனைகளுடன் மிகவும் சிறப்பாக நடைபெறவுள்ளது.
முக்கியமாக லிங்கோற்பவ காலத்தில் (இரவு 12.00 மணிக்கும் 1.30 மணிக்கும் இடைப்பட்ட காலம்) விஷேட ஸ்நபனாபிஷேகம் நடைபெறவுள்ளது.
அத்துடன் ஓதுவார் மூர்த்திகளினால் சிவராத்திரி புராணம் ஓதப்பட்டு விளக்கவுரை (பயன்) சொல்லப்படவுள்ளது.
ஆகவே சிவராத்திரி நன்னாளில் விரதம் அனுஷ்டிக்கும் மெய்யடியார்கள் அனைவரும் வில்வம், உதிர்பூக்கள், பால், இளநீர் ஆகிய பூஜைப் பொருட்களுடன் ஆலயத்திற்கு வருகை தந்து, இயன்றளவு சரியைத் தொண்டுகள் செய்து, புராண படனங்களைக் கேட்ட வண்ணம், நித்திரை விழித்து நான்கு சாமங்களிலும் நடைபெறும் அபிஷேக ஆராதனைகளை கண்டு தரிசித்து வள்ளி, தேவசேனா சமேத முருகையாவின் திருவருள் கடாக்ஷத்தைப் பெற்றுய்யுமாறு வேண்டுகின்றோம்.
09-03-2024 சனிக்கிழமை காலை ஆலய திருமடத்தில் பாரணை அன்னதானம் இடம்பெறும்.
உபயகாரர்கள் – வ.சின்னப்பொடி குடும்பத்தினர் – நாகர்கோவில் மேற்கு
நிர்வாக சபையினர்