Welcome to Ecomanic - we offer landsaping services
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் அமைந்துள்ள விநாயகப் பெருமானுக்கு எதிர்வரும் 18-12-2023ம் நாள் திங்கட்கிழமை விநாயக ஷஷ்டி விரத விஷேட பூஜை, உற்சவம் நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.
அன்றைய தினம் மாலை 3.30 மணியளவில் விநாயகப் பெருமானுக்கு விஷேட ஸ்நபன அபிஷேகம் நடைபெற்று, தொடர்ந்து விஷேட நைவேத்தியங்கள் நிவேதிக்கப்பட்டு சிறப்பு பூஜாராதனை இடம்பெறும்.
அதனைத் தொடர்ந்து பிள்ளையார் கதை படிப்பு நடைபெறும்.
மாலை 5.00 மணியளவில் வசந்த மண்டபத்தில் அலங்கார மூர்த்தியாக எழுந்தருளியிருக்கும் விநாயகப் பெருமானுக்கு விஷேட பூஜாராதனைகள் இடம்பெற்று சிறப்பு பஜனை பிரார்த்தனையுடன் உள்வீதி உலா வரும் நிகழ்வு இடம்பெறும்.
எனவே இந்த சிறப்பான விநாயக ஷஷ்டி (பெருங்கதை) விரத விசேட பூஜையில் எம்பெருமான் அடியவர்கள் அனைவரும் கலந்து கொண்டு தரிசித்து விநாயகப்பெருமானின் திருவருளைப் பெற்றுய்யுமாறு பணிவன்புடன் வேண்டிக்கொள்கின்றோம்.
உபயகாரர் – திரு ஆறுமுகம் – அழகராசா குடும்பம் – நாகர்கோவில் மேற்கு
நிர்வாக சபையினர்