Welcome to Ecomanic - we offer landsaping services

  • 007 Edgar Buildings,
    George Street, CA 03, USA

  • Mon - Sat 9.00 - 20.00,
    Sunday Close

எதிர்வரும் 14-04-2021 அன்று புதன்கிழமை அதிகாலை 1-39 மணிக்கு பூர்வபக்க துதியை திதியில், பரணி நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில், மகர லக்கினத்தில், சனி காலவோரையில் புதிய பிலவ வருஷம் பிறக்கின்றது.

செவ்வாய் முன்னிரவு 9.39 மணி முதல் புதன் காலை 5.39 மணி வரை விஷு புண்ணிய காலமாகும்

இப்புண்ணிய காலத்தில் யாவரும் வைகறையில் துயிலெழுந்து, நித்திய கர்மானுஷ்டங்களை முடித்து, விதிப்படி சங்கற்பித்து, மருத்து நீர் தேய்த்து ஸ்நானம் செய்து, நீலம், சிவப்பு நிறமுடைய பட்டாடையாயினும், நீலம், சிவப்பு கரையமைந்த புதிய பட்டாடையாயினும் அணிதல் வேண்டும்.

புதிய பிலவ வருடப் பிறப்பு நாளில் மேற்கூறிய வண்ணம் ஸ்நானம் செய்து புதிய வஸ்திரமணிந்த பின்னர், மனத்தூய்மையுடன் குலதெய்வங்களை வழிபாடு செய்து, பிதா, மாதா, குரு ஆகியோரை வணங்கி, இயன்ற தான தருமங்கள் செய்து மங்களகரமாக வாழக்கடவர்.

புதிய பிலவ வருஷ தோஷ நட்சத்திரங்கள்:-

அச்சுவினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம், பூரம், உத்தரம் 2,3,4ம் பாதம், அத்தம், சித்திரை 1,2ம் பாதம், பூராடம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தோர் தவறாது மருத்து நீர் தேய்த்து ஸ்நானம் செய்து இயன்ற தான தருமங்களைச் செய்தல் வேண்டும்.

அன்றைய தினம் அருள்மிகு முருகையா ஆலயத்தில், புதிய பிலவ வருஷம் காலை  7.00 மணியளவில் விசேட அபிஷேகம் நடைபெற்று, ஆலய வாசலில் புதிய பானையில் பொங்கல் செய்து படைத்து, சித்திரைப் புதிய பிலவ வருஷ விசேட பூஜை மிகவும் சிறப்பாக நடைபெறவுள்ளது.

இந்த சித்திரை புதிய பிலவ வருடப் பிறப்பு விசேட பூஜையில் முருகையாவின் அடியார் பெருமக்கள் அனைவரும் கலந்து கொண்டு எம்பெருமானைத் தரிசித்து இஷ்ட சித்திகளைப் பெற்றுய்யுமாறு வேண்டிக்கொள்கின்றோம்.

உபயம் – மா.சாம்பசிவம் குடும்பத்தினர் – நாகர்கோவில் கிழக்கு

நிர்வாக சபையினர்
அருள்மிகு முருகையா தேவஸ்தானம்
நாகர்கோவில் வடக்கு