Welcome to Ecomanic - we offer landsaping services
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் எதிர்வரும் 16-07-2020ம் திகதி வியாழக்கிழமை ஆடி மாதக் கார்த்திகை உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.
அன்றைய தினம் முற்பகல் 10.00 மணியளவில் மூல மூர்த்தியாகிய வள்ளி தேவசேனா சமேத முருகையாவுக்கு ஸ்நபனாபிஷேகம் நடைபெற்று அதனைத் தொடர்ந்து விஷேட பூஜை இடம்பெறவுள்ளது.
மூலவரின் விஷேட பூஜையைத் தொடர்ந்து நண்பகல் கந்தபுராண படனம் (கந்த விரதப் படலம்) ஓதுவார்களினால் வாசிக்கப்பட்டு பயன் விரித்துக் கூறும் நிகழ்வு நடைபெறவுள்ளது.
புராண படனம் நிறைவடைந்த பின்னர், வசந்த மண்டபத்தில் அலங்கார ரூபமாக வீற்றிருக்கும் அனுக்கிரக மூர்த்தியாகிய எம்பெருமானுக்கு விசேட தூப தீபங்கள் அடங்கிய சோடசோபசார பூஜாராதனைகள் நடைபெற்று உள்வீதி உலாவரும் உற்சவ நிகழ்வு நடைபெறும்.
எம்பெருமான் அடியார்கள் அனைவரும் மேற்படி கார்த்திகை உற்சவத்தில் தவறாது கலந்து கொண்டு வள்ளி தேவசேனா சமேத அருள்மிகு முருகையாவை தரிசித்து இஷ்ட சித்திகளையும், திருவருளையும் பெற்றுய்யுமாறு பணிவன்புடன் வேண்டிக் கொள்கின்றோம்.
உபயம் – குணசீலராசா குருகுலசிங்கம்– நாகர்கோவில் கிழக்கு
குறிப்பு – இவ்வருடம் ஆடி மாதத்தில் இரண்டு கார்த்திகை உற்சவம் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நிர்வாக சபையினர்