Welcome to Ecomanic - we offer landsaping services

  • 007 Edgar Buildings,
    George Street, CA 03, USA

  • Mon - Sat 9.00 - 20.00,
    Sunday Close

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா ஆலயத்தில் எதிர்வரும் 08-03-2020 ஞாயிற்றுக்கிழமை நடேசரபிஷேகம் விசேட பூஜை, உற்சவம் என்பன நடைபெறவுள்ளன என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.

அன்றைய தினம் மாசி மகம் என்பதும் அம்மனுக்கு விஷேடமான நாள் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

அன்று முற்பகல் 10.30 மணியளவில் நடேசருக்கு ஸ்நபனாபிஷேகமும் மற்றும் விநாயகர், மூலவர், வீரமகாகாளியம்மனுக்கு உருத்திராபிஷேகமும் நடைபெற்று, தொடர்ந்து விஷேட பூஜை இடம்பெறும்.

அதனைத் தொடர்ந்து வசந்த மண்டப பூஜை நடைபெற்று சிவகாமியம்மை சமேத நடேஷப்பெருமான் விஷேட பஜனைக் கானங்களுடன் உள்வீதி உலாவரும் உற்சவ நிகழ்வு இடம்பெறும்.

எம்பெருமான் அடியார்கள் அனைவரும் வருகைதந்து சிவகாமியம்மை சமேத நடேசப்பெருமானை தரிசித்து இஷ்டசித்திகளைப் பெற்றேகுமாறு பணிவன்புடன் வேண்டிக்கொள்கின்றோம்.

உபயம் – அனித்தா மதிராஜ் – நோர்வே

நிர்வாக சபையினர்