Welcome to Ecomanic - we offer landsaping services

  • 007 Edgar Buildings,
    George Street, CA 03, USA

  • Mon - Sat 9.00 - 20.00,
    Sunday Close

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 10-06-2020 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள மகோற்சவத்தின் ஒவ்வொரு திருவிழாவுக்குரிய கட்டணங்களை வெளியிடுகின்றோம்.

சாதாரண திருவிழாக்களான

இரண்டாம் திருவிழா – 215,000 ரூபா
மூன்றாம் திருவிழா – 215,000 ரூபா
நான்காம் திருவிழா – 215,000 ரூபா
ஐந்தாம் திருவிழா – 215,000 ரூபா

கட்டண செலவீன விபரம்

குருக்கள்/ ஆலய குருக்கள்/ மடப்பள்ளி ஐயர் – 30,000 ரூபா
108 சங்காபிஷேகம்/ அபிஷேகம் – 40,000 ரூபா
ஒலி, ஒளி அமைப்பு – 25,000 ரூபா
மேளம் ஒரு செற் – 25,000 ரூபா
மாலை/ சாத்துப்படி – 30,000 ரூபா
பகல்,இரவு அன்னதானம் – 55,000 ரூபா
அலங்காரம்/ வெள்ளை – 10,000 ரூபா

மற்றைய ஒவ்வொரு திருவிழாவிற்கும் அடிப்படை கட்டணத்திற்கும் (215,000)  மேலதிகமாக அவ்வவற்றின் தேவைக்கேற்ப செலவீனங்கள் அதிகமாகும் என்பதை எம்பெருமானின் அடியார்களுக்கு அறியத் தருகின்றோம்.

இவை தொடர்பாக மேலதிக விபரங்கள் திருவிழா முடிவு செய்த பின் அதன் உபயகாரர்களுடனும் குருக்களுடனும் கலந்தாலோசித்து முடிவு செய்யப்படும்.

மேலதிக விபரங்களை அறிவதற்காக தேவஸ்தான நிர்வாக சபை பொருளாளர் அவர்களுடன் தொடர்பு கொள்ளவும்.

குறிப்பு
மேற்படி திருவிழாக்களில் ஆறாவது திருவிழாவாக குறிப்பிட்டுள்ள கப்பல் திருவிழா தொடர்பாக பல அடியார்கள் கருத்துகள்,ஆலோசனைகள் தெரிவித்துள்ளதற்கிணங்க அத்திருவிழாவை நீக்கி அதற்குப் பதிலாக குருக்களுடன் ஆலோசித்து வேறு ஒரு திருவிழா சேர்த்துக் கொள்ளப்படவுள்ளது என்பதனையும் அறியத் தருகின்றோம்.

நிர்வாக சபையினர்