Welcome to Ecomanic - we offer landsaping services

  • 007 Edgar Buildings,
    George Street, CA 03, USA

  • Mon - Sat 9.00 - 20.00,
    Sunday Close

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் நிகழும் விளம்பி வருஷம் பங்குனி மாதம் 25ம்(08-04-2019) திகதி திங்கட்கிழமை கார்த்திகை விரத விஷேட பூஜை சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.

அன்றைய தினம் முற்பகல் 10.30 மணியளவில் மூல மூர்த்தியாகிய வள்ளி தேவசேனா சமேத முருகையாவுக்கு ஸ்நபனாபிஷேகம் நடைபெற்று அதனைத் தொடர்ந்து, கந்தபுராண படனம் (கந்த விரதப் படலம்) ஓதுவார்களினால் வாசிக்கப்பட்டு பயன் விரித்துக் கூறும் நிகழ்வு நடைபெறவுள்ளது.

அதனைத் தொடர்ந்து மாலை 4.00 மணியளவில் வள்ளி தேவசேனா சமேத முருகையாவுக்கு சிறப்பு பூஜாராதனை இடம்பெற்று கார்த்திகை விரத விஷேட பூஜை நிறைவு பெறும்.

எம்பெருமான் அடியார்கள் அனைவரும் மேற்படி கார்த்திகை விரத விஷேட பூஜை நிகழ்வில் தவறாது கலந்து கொண்டு வள்ளி தேவசேனா சமேத அருள்மிகு முருகையாவை தரிசித்து இஷ்ட சித்திகளையும, திருவருளையும் பெற்றுய்யுமாறு பணிவன்புடன் வேண்டிக்கொள்கின்றோம்.

உபயம் – ரங்கநாதன் காயத்திரி குடும்பம்– லண்டன்

நிர்வாக சபையினர்
அருள்மிகு முருகையா தேவஸ்தானம்
நாகர்கோவில் வடக்கு