Welcome to Ecomanic - we offer landsaping services
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் நிகழும் ஏவிளம்பி வருஷம் கார்த்திகை மாதம் 16ம் (02-12-2017) திகதி சனிக்கிழமை அன்று திருக்கார்த்திகை தீபத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத் தருகின்றோம்.
அன்றைய தினம் பிற்பகல் 03.00 மணியளவில் மூலமூர்த்தியாகிய வள்ளி தேவசேனா சமேத முருகையாவுக்கு ஸ்நபனாபிஷேகம் நடைபெற்று அதனைத் தொடர்ந்து கந்தவிரதப் படலம் புராண படனம் ஆலய ஓதுவார்களினார் ஓதப்பட்டு உரை விளக்கம் தரப்படும்.
புராண படனம் பூர்த்தியடைந்தவுடன் விஷேட பூஜை நடைபெற்று, வசந்த மண்டபத்தில் அலங்கார ரூபமாக எழுந்தருளியிருக்கும் வள்ளி தேவசேனா சமேத முருகையாவுக்கு சிறப்பு பூசாராதனை இடம்பெற்ற பின்னர் மங்கள வாத்தியங்கள் முழங்க எம்பெருமான் அழகிய மயில்வாகனத்தில் உள்வீதி உலா எழுந்தருளுவார்.
தொடர்ந்து ஆலய வாசலில் சொக்கப்பனை எரிக்கும் காட்சியுடன் தீபம் ஏற்றும் நிகழ்வும் நடைபெறவுள்ளது.
எம்பெருமான் அடியவர்கள் அன்றைய தினம் வருகை தந்து எம்பெருமானைத் தரிசித்து இஷ்ட சித்திகளைப் பெற்றுய்யும் வண்ணம் பணிவன்புடன் வேண்டிக் கொள்கின்றோம்.
உற்சவ உபயகாரர் – திரு ஆறுமுகம் – அழகராசா குடும்பத்தினர் நாகர்கோவில் மேற்கு – லண்டன்
நிர்வாக சபையினர்
அருள்மிகு முருகையா தேவஸ்தானம்
நாகர்கோவில் வடக்கு: