Welcome to Ecomanic - we offer landsaping services

  • 007 Edgar Buildings,
    George Street, CA 03, USA

  • Mon - Sat 9.00 - 20.00,
    Sunday Close

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில், நிகழும் ஏவிளம்பி வருஷம் ஆடி மாதம் 02ம் (18-07-2017) திகதி செவ்வாய்க்கிழமை கார்த்திகை உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.

அன்றைய தினம்முற்பகல் 11.00 மணியளவில் மூல மூர்த்தியாகிய வள்ளி தேவசேனா சமேத முருகையாவுக்கு ஸ்நபனாபிஷேகம் நடைபெற்று அதனைத் தொடர்ந்து விஷேட பூஜை இடம்பெறவுள்ளது.

மூலவரின் விஷேட பூஜையைத் தொடர்ந்து வசந்த மண்டபத்தில் அலங்கார ரூபமாக வீற்றிருக்கும் அனுக்கிரக மூர்த்தியாகிய எம்பெருமானுக்கு விசேட தூப, தீபங்கள் அடங்கிய சோடசோபசார ஆராதனைகள் நடைபெற்று உள்வீதி உலாவரும் உற்சவ நிகழ்வு நடைபெறவுள்ளது.

நண்பகல் கந்தபுராண படனம் (கந்த விரதப் படலம்) ஓதுவார்களினால் வாசிக்கப்பட்டு பயன் விரித்துக் கூறும் நிகழ்வு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எம்பெருமான் அடியார்கள் அனைவரும் மேற்படி உற்சவ விஷேட பூஜை நிகழ்வில் தவறாது கலந்து கொண்டு வள்ளி தேவசேனா சமேத அருள்மிகு முருகையாவை தரிசித்து இஷ்ட சித்திகளையும், திருவருளையும் பெற்றுய்யுமாறு பணிவன்புடன் வேண்டிக்கொள்கின்றோம்.

உபயகாரர் –  கு.குருகுலசிங்கம்  – நாகர்கோவில் கிழக்கு

குறிப்பு
இந்த வருடம் ஆடி மாதத்தில் இரண்டு கார்த்திகை விரத தினங்கள் வருகின்றன. அதில் முதலாவது ஆடி மாதம் 02ம் திகதியும் இரண்டாவது ஆடி மாதம் 30ம் திகதியும் வருகின்றது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.

நிர்வாக சபையினர்
அருள்மிகு முருகையா தேவஸ்தானம்
நாகர்கோவில் வடக்கு