Welcome to Ecomanic - we offer landsaping services
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் பரிவார மூர்த்தியாக அமைந்துள்ள ஐயனாருக்கு எதிர்வரும் 14-01-2017 சனிக்கிழமையன்று சிறப்பு அபிஷேகம், விஷேட பூஜை இடம்பெறவுள்ளது என்பதை அடியார் பெருமக்களுக்கு அறியத்தருகின்றோம்.
அன்றைய தினம் பிற்பகல் 3.00 மணிக்கு ஐயனார் மூர்த்திக்கு ஸ்நபனாபிஷேகமும், மற்றும் மூலவருக்கும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் உருத்திராபிஷேகமும் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
அதனைத் தொடர்ந்து விஷேட பூஜை நடைபெற்று பிரசாதம் வழங்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளது.
எனவே அடியார்கள் அனைவரும் எதிர்வரும் தைப்பொங்கல் (14-01-2017) நாளன்று நடைபெறும் விஷேட அபிஷேகம், பூஜைகளில் தவறாது கலந்து கொண்டு எல்லாம் வல்ல ஐயனார் பெருமானைத் தரிசித்து இஷ்ட சித்திகளைப் பெற்றேகுமாறு பணிவன்புடன் வேண்டுகின்றோம்.
உபயம் – திரு மு.கதிர்காமு குடும்பம் – நாகர்கோவில் கிழக்கு
நிர்வாக சபையினர்
அருள்மிகு முருகையா தேவஸ்தானம்
நாகர்கோவில் வடக்கு